Yi ge dou bu neng shao (1999)In a remote mountain village, the teacher must leave for a month, and the mayor can find only a 13-year old girl... See full summary » Director:Yimou ZhangWriter:Xiangsheng Shi | |
Watch Trailer » |
சரிநிகர் சமானமாய்
காஞ்சி இலக்கிய வட்டம் 1989-ஆம் ஆண்டு திரு நாராயணன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகின்ற இலக்கிய அமைப்பு. தமிழ் உலகின் அனைத்து படைப்பாளிகளும் கலந்து கொண்ட சிறப்பை பெற்றது. இதன் நோக்கம் வாசித்தல் - விவாதித்தல் - படைத்தல் - பகிர்ந்துகொள்ளுதல்
Sunday, March 6, 2011
Saturday, February 12, 2011
இரண்டு கடிதம்-இலக்கிய வட்டம்
February 12th, 2011
சோற்றுக் கணக்கை படித்தபின் எனக்கு காஞ்சிபுரம் – இலக்கியவட்டம் நாராயணன் தான் ஞாபகத்திற்கு வந்தார். எனக்குத் தெரிந்த ‘கெத்தேல் சாகிப்’ அவர்தான். அவர் நடத்திய இலக்கிய வட்டக் கூட்டங்களில் புத்தக விற்பனையும் உண்டு. நவீன இலக்கிய பதிப்பகங்கள் பலவற்றிலிருந்து 25% சதவிகித தள்ளுபடி விலைக்குப் புத்தகங்கள் வாங்கி அதே 25% தள்ளுபடியில் வாசகர்களுக்குக் கொடுப்பார். அதுவும் கடனுக்கு. எல்லாக் கூட்டங்களிலும் புத்தகங்கள் மூன்று, நான்கு பெஞ்சுகளில் கண்காட்சியாக வைக்கபட்டிருக்கும. கூட்டத்திற்கு வரும் யார் வேண்டுமென்றாலும் அப்புத்தகங்களை கடனுக்கு வாங்கிச் செல்லலாம். அக்கடனை எப்பொழுது வேண்டுமானாலும் திருப்பிச் செலுத்தலாம். திருப்பிச் செலுத்தாமலேயே கூட சிலர் இருந்திருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு கணக்குப் பாத்தபோது ரூபாய் இரண்டு லட்சத்திற்கு மேல் அங்கு புத்தக விற்பனை நடந்துள்ளது எனபது தெரியவந்தது. (இரண்டாயிரம் ரூபாய் மாத சம்பளம் வாங்கிய நாட்களில் நானே கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளேன்) இதில் எத்தனை ரூபாய் அவர் போட்டது, எத்தனை ரூபா வாங்கியவர்களிடமிருந்து வந்த பணம் எனபதற்கு அவரிடம் கணக்கு வழக்கு கிடையாது. ஆனால் கடனுக்குப் புத்தகம் புத்தகம் வாங்கியவர்களுக்கு மூன்று முறை அஞ்சல் அட்டை அனுப்புவார். பதிலோ, பணமோ வரவில்லையெனில் கவலைப் படமாட்டார். பண விசயத்தில் கறாரான குடும்பத்திலிருந்து வந்த எனக்கு இது அதிர்ச்சியாக இருக்கும்.
1997 முதல் 2000 வரை அவரது பல் கூட்டங்களில் நான் புத்தக விற்பனைக்கு பில் போடுபவனாக இருந்திருக்கிறேன். அதற்கு முன்பு வரை அப்படி யாரும் பொறுப்பெடுத்து கிடையாது; அந்நேரத்தில் இலக்கிய வட்ட நண்பர்களில் யார் புத்தகங்கள் பக்கம் இருக்கிறார்களோ அவர்தான் பில் போடுவார். அதனால் எத்தனை புத்தகங்கள் பணம் கொடுக்காமல் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதற்கு கணக்கு கிடையாது. பொதுவாக அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான் என்றாலும், நான் இருக்கும்போதே ஒருமுறை ஒரு நபர் ஒரு புத்தகத்துடன் வாசல் தாண்டிச் சென்றுவிட்டார். கேட்டதற்கு அதை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என நினைத்துவிட்டாராம்!
ஒருமுறை அப்பாவிடம் (நாராயணன் அவர்களை நான் அவ்வாறுதான் அழைப்பேன்) வாராக் கடன் குறித்து கேட்டபோது, அவர் அலட்டிகொள்ளாமல் உண்மைலேயே இலக்கிய ஆர்வம் உள்ளவன் கண்டிப்பாக ஒருநாள் புத்தகத்திற்கான பணத்தைத் திருப்பித்தருவான் என்றார். வராத பட்சத்தில் அவரது சொந்தப் பணமோ அல்லது நுகம் எழுதிய எக்பர்ட் சச்சிதானந்தம், தரும. ரத்தினக் குமார், சேதுராமன், காமராஜ், அமுத கீதன் போன்ற நண்பர்கள் பகிர்ந்துகொள்வோம் என்றார். இதனால் வீட்டில் அவருக்குக் கெட்ட பெயர். அவர்மேல் கோபம் கொள்ளும்போது, புகழ் போதையில் அவர் அவ்வாறு செய்வதாக அம்மா சொல்வார். ஆனால், ஒரு இலக்கிய வட்ட நிகழ்ச்சியை நடத்த அவரது செயல்களை அருகிருந்து பார்த்தவன் என்ற முறையில் அவர் புகழுக்காக செய்வதில்லை எனபது எனக்கும் தெரியும். நிகழ்ச்சி நடக்க இருக்கம் நாள் (அனேகமாக கடைசி ஞாயிறு) அன்று ஏழு மணிக்கு பூக்கடைச் சத்திரம் PTVS வன்னியர் உயர்நிலைப் பள்ளி சென்று ஒற்றை ஆளாக டெஸ்க், பெஞ்சுகளை தூக்கி முறைப்படுத்தி வைப்பார். பள்ளிக்கு வெளியில் பேனர் கட்டுவார். ஆற்காடு அருகில் இசையனூர் கிராமத்தில் நான் வேலை பார்த்து வந்த அக்காலங்களில் சனியன்று மாலையே அவர் வீடு சென்று தங்கிவிடுவது என் வழக்கம். மறுநாள் காலையில் தினமணி பேப்பர் படித்துவிட்டு, அவர் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் வேர்க்கடலையை சாப்பிட்டுவிட்டு அவருக்கு உதவி செய்யலாம் என்று செல்லும்போது கிட்டத்தட்ட அவர் எல்லா வேலைகளையும் செய்து முடித்திருப்பார். அவர் உடம்பு முழுதும் வியர்வையில் நனைந்திருக்கும். ஆம், அது கெத்தேல் சாகிப் பொருட்கள் வாங்கி, சமையல் செய்து, பரிமாறுவது போன்றது தான்.
நான், ஓரளவு நல்ல வேலையில் அமர்ந்ததும் ஒரு இலக்கிய வட்ட நிகழ்வையாவது என்னுடைய செலவில் நடத்தவேண்டும் என்ற ஆசை இருந்தது. எல்லாவற்றையும் ஒத்திப்போடும் என் வழகத்தாலும், அவருக்கு உடல் நலம் குன்றியதால் அதிக கூட்டங்கள் முன்புபோல் நடத்த முடியாமல் போனதாலும் என் ஆசை நிராசையானது. கடைசியில் அவரும் மறைந்துவிட்டார். எல்லோருக்கும் எப்போதும் உதவிய அவருக்கு, யாராலும் உதவி செய்யமுடியாமல் போன ஒரு நிலையில் நிகழ்ந்த அவரது மரணம் பலருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதை இரண்டாண்டுகளாக என் பிளாக்கில் பதிய வேண்டுமென்று நினைத்திருந்தேன். இதை எழுத வைத்த கெத்தேல் சாகிப்பிற்கும், உங்களுக்கும் நன்றி.
அன்புடன்
தங்கவேல்
அன்புள்ள தங்கவேல்,
நான் நாராயணனை நன்றாகவே அறிவேன். 1990 ல் என்னுடைய ரப்பர் நாவலை வாசித்துவிட்டு எனக்கு ஒரு கார்டில் பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அதன்பின் பல கடிதங்கள். எப்போதுமே கார்டுதான். ரப்பர் ஸ்டாம்பு அடித்திருப்பார். என்னுடைய நூல்களை அவர் விற்க விரும்புவதாக எழுதியிருந்தார். வெளியாகி இருந்த ஒரே நூல் ரப்பர். அதை அனுப்ப ’தாகம்’ பதிப்பகம் அகிலன் கண்ணனுக்குச் சொன்னேன்
திசைகளின் நடுவே வெளிவந்தபோது எனக்காக அங்கே ஒரு விவாதக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். நான் செல்ல முடியவில்லை. இளம் எழுத்தாளனுக்கு அன்றைய சூழலில் அதெல்லாம் பெரிய கௌரவங்கள்.
1992ல் எனக்கு திருமணமானபோது அவருக்குச் சொன்னேன். காஞ்சீபுரம் வரும்படி அழைத்தார். நானும் அருண்மொழியும் 1992 டிசம்பரில் அவரைப்பார்க்கச் சென்றோம். காஞ்சீபுரத்தில் ஓட்டலில் தங்கினோம். அவர் என்னை அவரது வீட்டுக்கு கூட்டிச்செல்லவில்லை ‘அதெல்லாம் எதுக்கு? உங்களுக்கு நெறைய எடமிருக்கு’ என்று சொன்னார்
மூன்றுநாட்கள் காஞ்சியை முழுக்க சுற்றிக்காட்டினார். அறியப்பட்ட கோயில்கள் தவிர சமண காஞ்சியிலும் பௌத்த காஞ்சியிலும் உள்ள கைவிடப்பட்ட சின்ன கோயில்கள். நான்கடவுளில் வரும் மண்ணுக்கு அடியில் உள்ள கோயில் எல்லாம். அவரே ஒவ்வொரு கோயிலிலும் நுட்பங்களை சுட்டிக்காட்டினார். கோயில்களுடன் சம்பந்தமுள்ள வேடிக்கைகளை சொன்னார். மூன்றுநாட்களும் அவரது ஆளுமையை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன்
‘வெ நாராயணன்னா என்ன?’ என்றேன். ‘வெட்டிவேலை நாராயணன்தான் வேற என்ன?’ என்றார். அவரது பூர்வீகம் தஞ்சை. காஞ்சியில் இருந்தாலும் தஞ்சாவூர்த்தனம் அவரிடம் நிரம்ப உண்டு. கிட்டதட்ட அறம் கதையில் வரும் சாமிநாதன்போல
இலக்கியமனிதர்கள் வரிசையில் அவரைப்பற்றி நீண்ட கட்டுரை எழுதுவதாக இருந்தேன்.
வெ.நாராயணன் ஒரு கர்ம யோகிதான். ஞானிதான். கெத்தேல் சாகிப்பை போல
ஜெ
Friday, February 4, 2011
ஒன்றும் குறையாமல் NOT ONE LESS
கதைச் சுருக்கம் கவோ என்கிற கிராமப் பள்ளியின் ஆசிரியர் தன்னுடைய உடல் சுகமற்ற தாயை பார்க்க செல்ல வேண்டியுள்ளது, வருவதற்கு ஒரு மாதம் ஆகலாம், அதுவரை பள்ளியை பார்க்க ஆள் வேண்டும். அந்த கிராம மேயர் ஒரு பெண்ணை அழைத்து வருகிறார். அவள் பெயர் வெய் மின்ழி. அவளுக்கு வயது 13தான், இவ்வளவு சிறிய பெண்ணை எதற்கு அழைத்து வந்தீர்கள் என ஆசிரியர் மேயரை கேட்க அவரோ எங்கு தேடியும் ஆள் கிடைக்கவில்லை நான் என்ன செய்ய என்கிறார். வேறு வழி இல்லாமல் அவள் தற்காலிக ஆசிரியராகிறாள்.
கவோவின் வகுப்பில் தொடக்கத்தில் 40 மாணவர்கள் இருந்தார்கள் இப்போது 24 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.ஆசிரியர் கவோ அவளிடம் வகுப்பில் எந்த மாணவனும் குறையாமல் இருக்கவேண்டும் அப்போதுதான் பேசிய தொகை கொடுக்கமுடியும் என்று கூறிவிட்டு செல்கிறார்.
தொடக்கத்தில் மாணவர்களை சமாளிக்க முடியாமல் தவிக்கும் வெய் பிறகு அ வர்களோடு ஐக்கியமாகிவிடுகிறாள், இந்த நிலையில் ஒரு குறும்பு மாணவன் சாங் பள்ளிக்கு வரவில்லை குடும்ப வறுமை காரணமாக அவனை அவன் தாய் பட்டணத்திற்கு வேலை அனுப்பி வைத்திருக்கிறாள். அவனை எப்படியும் கூட்டி வரவேண்டுமென புறப்படுகிறாள் வெய். எப்படி நகருக்கு சென்றாள் அவனை கண்டுபிடித்தாளா அதன் பின் என்ன ஆனது என்பது சுவாரசியமானது. படத்தை அனைவரும் பார்க்கலாம். இந்தப்படம்தான் இந்த வாரம் திரையில் பார்க்க இருக்கிறோம்.
« Prev Next »
கவோவின் வகுப்பில் தொடக்கத்தில் 40 மாணவர்கள் இருந்தார்கள் இப்போது 24 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.ஆசிரியர் கவோ அவளிடம் வகுப்பில் எந்த மாணவனும் குறையாமல் இருக்கவேண்டும் அப்போதுதான் பேசிய தொகை கொடுக்கமுடியும் என்று கூறிவிட்டு செல்கிறார்.
தொடக்கத்தில் மாணவர்களை சமாளிக்க முடியாமல் தவிக்கும் வெய் பிறகு அ வர்களோடு ஐக்கியமாகிவிடுகிறாள், இந்த நிலையில் ஒரு குறும்பு மாணவன் சாங் பள்ளிக்கு வரவில்லை குடும்ப வறுமை காரணமாக அவனை அவன் தாய் பட்டணத்திற்கு வேலை அனுப்பி வைத்திருக்கிறாள். அவனை எப்படியும் கூட்டி வரவேண்டுமென புறப்படுகிறாள் வெய். எப்படி நகருக்கு சென்றாள் அவனை கண்டுபிடித்தாளா அதன் பின் என்ன ஆனது என்பது சுவாரசியமானது. படத்தை அனைவரும் பார்க்கலாம். இந்தப்படம்தான் இந்த வாரம் திரையில் பார்க்க இருக்கிறோம்.
« Prev Next »
Thursday, February 3, 2011
15 wins & 1 nomination See more awards »
திரை அரங்கம்
வருகின்ற ஆறாம் தேதி அதாவது 6 02 2011அன்று மாலை ஆறு மணிக்கு திரை அரங்கத்தில் திரையிடப்பட இருக்கும் படம் நாட் ஒன் லெசு இது ஒரு சீன திரைப்படம். ஒரு கிராமத்து பள்ளியில் தற்காலிகமாக பணிபுரிய வரும் ஒரு இளம் பெண்ணின் அனுபவங்களே கதைக்கரு அவசியம் வாருங்கள்.
Wednesday, December 29, 2010
திரை அரங்கம் 2011 42வது திரையிடல்
How I Ended This Summer 2 01 2011 மாலை 5.00 மணிக்கு
ரஷ்யாவின் துருவப் ஆர்டிக் பெருங்கட்லை ஒட்டிய மனித நடமாற்றம் அற்ற தீவில் ஓர் வானிலை ஆய்வு மையம் உள்ளது. பருவநிலை ஆய்வாளன் செர்ஜி,பாவெல்,என இருவர் மட்டுமே பணிபுரிகின்றனர். பாவெல் கல்லூரி கோடை விடுமுறை பணிக்காக வந்துள்ளான்.இருவர் மட்டுமே அப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.இவர்களின் அன்றாட வேலை முறையாக கணக்கீடு செய்து அதை ரேடியோ அலைவரிசை மூலம் தலைமை நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.ரஷ்யா நாட்டைச் சார்ந்த ஆய்வு மையத்தில் தனி ஆளாகவே இந்த வேலையைச் செய்து அளுத்துப்போன செர்ஜிக்கு,51வயது, இயல்பான முரட்டுதனம் அவனிடத்தில் இருந்த்து. அவனுடைய வேலையை மிகச்சிரத்தையாக செய்வருபவன். அவனுடைய புதிய முகமாக வந்து இணைந்துள்ள பாவெல் கல்லூரி இளைஞனின் முகமும் குறும்பும் மாறவில்லை.இந்த கோடைகாலம் முழுவதும் செர்ஜிக்கு உதவிபுரிவதுதான் பாவெல்லின் வேலை. பாவெல் தன்னுடைய எம்பீ3யில்,பாடல்கள் கேட்பது, வீடியோ கேம் ஆடுவது என தனிமையை விரட்டுவருகின்றான்.செர்ஜி அமைதியாக வழக்கம்போல் தன்பணியை செய்துவருகின்றான்.ஒருநாள் செர்ஜி உணவுக்காக மீன் பிடிக்க செல்கிறான், பாவெல்லிடம் தன் பணியை ஒப்படைக்கின்றான்.அனுபவமற்ற பாவெல் கணக்கீடு செய்ய மறந்துவிடுகின்றான். தலைமை நிலையத்துக்கு அதை மறைக்க பொய்யான கணக்கீடுகளை அளிக்கின்றான்.நிலைமை மோசமாகிறது.செர்ஜிக்கு தலைமை நிலையத்தில் இருந்து கண்டன அறிக்கை வருகிறது, பாவெல் இதை மறைத்து விடுகிறான்.விஷயத்தை செர்ஜிக்கு எப்படிச்சொல்வது என தயங்கித்தயங்கி, சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறான்.கடைசியில் அந்த சொல்ல வேண்டிய உண்மையை சொல்லும் சூழல் வருகிறது. அந்த நிலை எவ்வாறு எதிர் கொள்ளப்படுகிறது. என்பதே முடிவுப்பகுதி.
இந்த படம் முழுக்க உறையும் பனிக்கட்டிகள், கூரான பாறைகள், அறைந்து செல்லும் கடலைகள் கருணையற்ற ஆர்டிக்கடல் இப்படி பின்புலம் பார்வையாளனோடு பேசிச் செல்கிறது.
இந்த படத்தில் நடித்துள்ள இயக்குனரும் நடிகருமான Sergei Puskepalis( Simple Things) என்ற படம் மூலம் நன்கு அறியப்பட்டவர்.கல்லூரி இளைஞனாக நடித்துள்ள Grigory Dobrygin (Black Lightening) படம் மூலம் அறிமுகமானவர். புதியவர்களல்லர். இரு நபர்களுக்கிடையே நட்பு, நம்பிக்கை மனிதநேயம், பரஸ்பர மன்னிப்பு இவற்றை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த படத்தை இயக்கி இருப்பவர் ரஷ்ய இளைஞர் Alexei Popogrebsky. இவர் தனது முந்தைய படமான "Koktebel" படத்துக்கு பல விருதுகளையும், பாரட்டுகளையும் பெற்றுள்ளார். ரஷ்யாவின் கிழக்கு மூலையில் அமைந்துள்ள பகுதிக்கே சென்று யதார்தமாக படம் பிடித்துள்ளார்
ஆக்கம்
இலக்கியவட்டம் செ.காமராஜ்
Subscribe to:
Posts (Atom)