Wednesday, December 29, 2010

திரை அரங்கம் 2011 42வது திரையிடல்

How I Ended This Summer   2 01 2011  மாலை 5.00 மணிக்கு
                                   ரஷ்யாவின்      துருவப்  ஆர்டிக் பெருங்கட்லை ஒட்டிய மனித நடமாற்றம் அற்ற தீவில் ஓர் வானிலை ஆய்வு மையம் உள்ளது. பருவநிலை ஆய்வாளன் செர்ஜி,பாவெல்,என இருவர் மட்டுமே பணிபுரிகின்றனர். பாவெல் கல்லூரி கோடை விடுமுறை பணிக்காக வந்துள்ளான்.இருவர் மட்டுமே அப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.இவர்களின் அன்றாட வேலை முறையாக கணக்கீடு செய்து அதை ரேடியோ அலைவரிசை மூலம் தலைமை நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.ரஷ்யா நாட்டைச் சார்ந்த ஆய்வு மையத்தில் தனி ஆளாகவே இந்த வேலையைச் செய்து அளுத்துப்போன செர்ஜிக்கு,51வயது, இயல்பான முரட்டுதனம் அவனிடத்தில் இருந்த்து. அவனுடைய வேலையை மிகச்சிரத்தையாக செய்வருபவன். அவனுடைய புதிய முகமாக வந்து இணைந்துள்ள பாவெல் கல்லூரி இளைஞனின் முகமும் குறும்பும் மாறவில்லை.இந்த கோடைகாலம் முழுவதும் செர்ஜிக்கு உதவிபுரிவதுதான் பாவெல்லின் வேலை.


                                 பாவெல் தன்னுடைய எம்பீ3யில்,பாடல்கள் கேட்பது, வீடியோ கேம் ஆடுவது என தனிமையை விரட்டுவருகின்றான்.செர்ஜி அமைதியாக வழக்கம்போல் தன்பணியை செய்துவருகின்றான்.ஒருநாள் செர்ஜி உணவுக்காக மீன் பிடிக்க செல்கிறான், பாவெல்லிடம் தன் பணியை ஒப்படைக்கின்றான்.அனுபவமற்ற பாவெல் கணக்கீடு செய்ய மறந்துவிடுகின்றான். தலைமை நிலையத்துக்கு அதை மறைக்க பொய்யான கணக்கீடுகளை அளிக்கின்றான்.நிலைமை மோசமாகிறது.செர்ஜிக்கு தலைமை நிலையத்தில் இருந்து கண்டன அறிக்கை வருகிறது, பாவெல் இதை மறைத்து விடுகிறான்.விஷயத்தை செர்ஜிக்கு எப்படிச்சொல்வது என தயங்கித்தயங்கி, சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறான்.கடைசியில் அந்த சொல்ல வேண்டிய உண்மையை சொல்லும் சூழல் வருகிறது. அந்த நிலை எவ்வாறு எதிர் கொள்ளப்படுகிறது. என்பதே முடிவுப்பகுதி.



                                  இந்த படம் முழுக்க உறையும் பனிக்கட்டிகள், கூரான பாறைகள், அறைந்து செல்லும் கடலைகள் கருணையற்ற ஆர்டிக்கடல் இப்படி பின்புலம் பார்வையாளனோடு பேசிச் செல்கிறது.

                                  இந்த படத்தில் நடித்துள்ள இயக்குனரும் நடிகருமான Sergei Puskepalis( Simple Things) என்ற படம் மூலம் நன்கு அறியப்பட்டவர்.கல்லூரி இளைஞனாக நடித்துள்ள Grigory Dobrygin (Black Lightening) படம் மூலம் அறிமுகமானவர். புதியவர்களல்லர். இரு நபர்களுக்கிடையே நட்பு, நம்பிக்கை மனிதநேயம், பரஸ்பர மன்னிப்பு இவற்றை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

                                      இந்த படத்தை இயக்கி இருப்பவர் ரஷ்ய இளைஞர்  Alexei Popogrebsky. இவர் தனது முந்தைய படமான "Koktebel" படத்துக்கு பல விருதுகளையும், பாரட்டுகளையும் பெற்றுள்ளார். ரஷ்யாவின் கிழக்கு மூலையில் அமைந்துள்ள பகுதிக்கே சென்று யதார்தமாக படம் பிடித்துள்ளார்  
 
 
 ஆக்கம்
இலக்கியவட்டம் செ.காமராஜ்

                

No comments: