Friday, February 4, 2011

ஒன்றும் குறையாமல் NOT ONE LESS

  கதைச் சுருக்கம்  கவோ என்கிற கிராமப் பள்ளியின் ஆசிரியர் தன்னுடைய உடல் சுகமற்ற தாயை பார்க்க செல்ல வேண்டியுள்ளது, வருவதற்கு ஒரு மாதம் ஆகலாம், அதுவரை பள்ளியை பார்க்க ஆள் வேண்டும். அந்த கிராம மேயர் ஒரு பெண்ணை அழைத்து வருகிறார். அவள் பெயர் வெய் மின்ழி. அவளுக்கு வயது 13தான், இவ்வளவு சிறிய பெண்ணை எதற்கு அழைத்து வந்தீர்கள் என ஆசிரியர் மேயரை கேட்க அவரோ எங்கு தேடியும் ஆள் கிடைக்கவில்லை நான் என்ன செய்ய என்கிறார். வேறு வழி இல்லாமல் அவள் தற்காலிக ஆசிரியராகிறாள்.
கவோவின் வகுப்பில் தொடக்கத்தில் 40 மாணவர்கள் இருந்தார்கள் இப்போது 24 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.ஆசிரியர் கவோ அவளிடம் வகுப்பில் எந்த மாணவனும் குறையாமல் இருக்கவேண்டும் அப்போதுதான்  பேசிய தொகை கொடுக்கமுடியும் என்று கூறிவிட்டு செல்கிறார்.

தொடக்கத்தில் மாணவர்களை சமாளிக்க முடியாமல் தவிக்கும் வெய் பிறகு அ வர்களோடு ஐக்கியமாகிவிடுகிறாள், இந்த நிலையில் ஒரு குறும்பு மாணவன் சாங் பள்ளிக்கு வரவில்லை குடும்ப வறுமை காரணமாக அவனை அவன் தாய் பட்டணத்திற்கு வேலை அனுப்பி வைத்திருக்கிறாள். அவனை எப்படியும் கூட்டி வரவேண்டுமென புறப்படுகிறாள் வெய். எப்படி நகருக்கு சென்றாள் அவனை கண்டுபிடித்தாளா அதன் பின் என்ன ஆனது என்பது சுவாரசியமானது. படத்தை அனைவரும் பார்க்கலாம். இந்தப்படம்தான் இந்த வாரம் திரையில் பார்க்க இருக்கிறோம்.

« Prev Next » Yi ge dou bu neng shao

1 comment:

DANIEL JAMES said...

காஞ்சிபுரம் 'திரை' அரங்கு முன்னேற்றத்தை நோக்கி பயணமாது சந்தோசம்.நல்ல பதிவு நன்றி.